ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச சேர்ந்த 7 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக மத்திய உளவுத்துறை மற்றும் கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தீவிர சோதனையில்
வள்ளிபுரத்தான்பாளையத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஏழு நபர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஏழு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.