சென்னை ஆவடியில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் பிரபல ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார்.
சென்னை ஆவடி கன்னியம்மன் நகரை சேர்ந்த நீண்டகால குற்றவாளியான தினேஷ் என்பவர் அண்மையில் ஜாமினில் வெளி வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் அடையாளம் தெரியாத சிலருடன் சேர்ந்து மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மர்மநபர்கள் தினேஷை வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய மர்ம நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.