69 உயிர்கள் பலியான பிறகும் திமுக தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளவில்லை! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Mar 18, 2026, 02:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

69 உயிர்கள் பலியான பிறகும் திமுக தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளவில்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக அரசு சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்! - அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jan 6, 2025, 05:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளச்சாராயத்தால் 69 உயிர்கள் பலியான பிறகும், திமுக தனது தவறுகளைத் திருத்திக்கொள்ளவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் நாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தால் 69 உயிர்கள் பலியான வழக்கு விசாரணையில், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளது.

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில், பல ஆண்டுகளாக நடந்து வரும் கள்ளச்சாராயம் தயாரிப்பு மற்றும் விற்பனையைத் தடுக்க தமிழக அரசு தவறியிருப்பதையும், மதுவிலக்குத்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என்றும் மாண்புமிகு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், மதுவிலக்குத் துறை அதிகாரிகள் பதிவு செய்யும் வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஜோடிக்கப்பட்டவை என்றும், முதன்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் சுதந்திரமாகச் செயல்படுகிறார்கள் என்றும் கூறியிருக்கின்றனர்.

அத்துடன், மதுவிலக்குத் துறை அதிகாரிகள் பல தவறுகளைச் செய்வதாகவும், அவ்வாறு தவறிழைக்கும் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் மாண்புமிகு நீதிபதிகள் விமர்சித்துள்ளனர். கள்ளச்சாராயம், போதைப்பொருள்கள் புழக்கம், தமிழகம் முழுவதுமே பெருகியிருப்பதை, தமிழக பாஜக தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. ஆனால், திமுக அரசு, தமிழகத்தில் கள்ளச்சாராயம் இல்லை என்றே கூறிவந்தது.

கள்ளக்குறிச்சி வழக்கில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ள தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படவில்லை என்றும், மாதவரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

மாதவரம் என்ன ஆந்திராவிலா இருக்கிறது? தங்கள் தவறுகளை மறைக்கவும், கள்ளச்சாராயத் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் திமுகவினரைப் பாதுகாக்கவும், திமுக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. 69 உயிர்கள் பலியான பிறகும், தங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ளவில்லை.

உண்மையில் மக்கள் நலனுக்காக நடக்கும் ஆட்சி என்றால், இன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு, திமுக அரசு தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaiEven after 69 lives were lostDMK did not correct its mistakes! - Annamalai allegation
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை! : பிரதமர் மோடி

Next Post

2025 முதலீடு செய்ய சிறந்த Mutual Fund?

Related News

திமுக நிர்வாகிகள் பெரும்பாலான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர் – அண்ணாமலை

இன்றைய தங்கம் விலை!

சென்னையில் வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்க சென்ற தம்பதியிடம் ரூ. 65,000 பறிமுதல்!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் சிலிண்டர்கள் பறிமுதல்- மத்திய அரசு

தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பை சீரழித்த திமுக – அண்ணாமலை விமர்சனம்

கரூர் துயர சம்பவம்-செந்தில்பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை

Load More

அண்மைச் செய்திகள்

வடகொரியா நாடாளுமன்ற தேர்தல் – கிம் ஜாங் உன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!

பாகிஸ்தானில் கடும் நிதிச்சுமை – தேசிய தின அணிவகுப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!

விமானப் பயணிகளுக்கு நிம்மதி – 60 % இடங்களுக்கு இருக்கை தேர்வு கட்டணம் விதிக்கப்படாது என அறிவிப்பு!

ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஜோ கென்ட் ராஜினாமா

காங்கிரஸில் இருந்து அசாம் மாநில எம்.பி. பிரத்யுத் பர்தோலோய் விலகல்!

ரயில்வே துறையில் அபார வளர்ச்சி – அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த ஐ.ஏ.எஸ், ராணுவ அதிகாரிகள

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்..ஆதவ் அர்ஜுனாவிற்கு நடிகர் ரஜினி காந்த் ரிப்ளை

மீண்டும் வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் அதிபர்

நேட்டோ நாடுகள் மீது அதிபர் ட்ரம்ப் கோபம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies