சவுதி அரேபியாவில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மெக்கா மற்றும் ஜெட்டாவில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், மோசமான வானிலை காரணமாக விமான சேவை, ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
பாலைவனப்பகுதியான சவுதியில் கடும் வெப்பம் நிலவும் நிலையில், திடீரென மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.