HMPV தொற்று காரணமாக மக்கள் அச்சமடைய வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், HMPV தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.
HMPV தொற்று தொடர்பாக WHO எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்றும், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் எனறும் கூறினார்.
சேலம் மற்றும் சென்னையில் தலா ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்க தேவையில்லை என்றும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.