புதுக்கோட்டையில் பிரியாணி கடை திறப்பு விழாவில், 5 பைசா நாணயம் கொண்டு வந்தால் 50 பேருக்கு இலவச பிரியாணி என்ற அறிவிப்பை தொடர்ந்து மக்கள் கூட்டம் அலைமோதியது.
புதுக்கோட்டை நிஜாம் காலனி பகுதியில் பிரியாணி கடையின் திறப்பு விழா நடைபெற்றது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் விநோத அறிவிப்பை கடை நிர்வாகம் வெளியிட்டது.
அதன்படி 5 பைசா நாணயத்தை கொண்டு வந்தால் 50 பேருக்கு இலவச பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் கடை திறப்பு விழாவின் போது மக்கள் முண்டியடித்து பிரியாணி வாங்க முற்பட்டனர்.
மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் கடைக்காரர்கள் திணறினர். இதனைத் தொடர்ந்து டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, அறிவிப்பில் சொன்னபடி 50 பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்பட்டது.