பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கபடுகிறதா என போக்குவரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு ஆம்னி பேருந்துகளில் செல்லும் பயணிகளிடம், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அருணாச்சலம் தலைமையிலான அதிகாரிகள்,சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள உத்தண்டி சுங்கச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, புதுச்சேரி, கடலூர் நாகப்பட்டினம் மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.