தான் எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை என்று, நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், மதகஜராஜா திரைப்பட விழாவுக்கு வந்திருந்த நடிகர் விஷாலை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். கை நடுக்கத்துடன் அவர் மேடையில் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.
கடும் காய்ச்சலுடன் நிகழ்ச்சிக்கு வந்ததாக விஷால் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் விஷால், மதகஜராஜா படத்தின் பிரிமியர் ஷோவுக்கு வந்திருந்தார்.
அப்போது பேட்டியளித்த அவர், தனக்கு சாதாரண வைரல் காய்ச்சல் தான் என்றும், தான் எந்த மருத்துவமனையிலும் அனுமதி ஆகவில்லை எனவும் கூறினார். மேலும் தன்னம்பிக்கை தான் தனது பலம் என்று கூறிய விஷால், எத்தனை சர்ச்சை வந்தாலும் தாண்டி வருவேன் எனத் தெரிவித்தார்.