சிவகங்கை அருகே காவல் நிலையம் சென்ற வழக்கறிஞரை போலீசார் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
திருப்புவனம் காவல் நிலையத்திற்கு கடந்த 10 -ஆம் தேதி வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் கோபால் என்பவர் சென்றுள்ளார். அப்போது, சார்பு ஆய்வாளர் சிவப்பிரகாஷுக்கும், வழக்கறிஞர் கோபாலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், சார்பு ஆய்வாளர், வழக்கறிஞரை தகாத வார்த்தைகளால் திட்டி, அங்கிருந்த காவலர்களுடன் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், அரசு மருத்துவனையில் வழக்கறிஞர் கோபால் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக வழக்கறிஞர் கோபாலின் மனைவி ரோகிணி, சிவகங்கை எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.