சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்த, விசைப் படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் காலையில் கரை திரும்பினர்.
இதனால், வஞ்சிரம், வவ்வால், சங்கரா, வெள்ளை பாறை, தோல் பாறை, பால் சுறா, ஷீலா, மயில் கோலா உள்ளிட்ட பெரிய வகை மீன்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
வஞ்சிரம் கிலோ 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சிறிய வகை மீன்களின் விலையும் குறைவாக இருந்தது. இதனால் மீன் பிரியர்கள் மற்றும் சில்லறை விற்பானையாளர்கள் மீன்களை அள்ளிச் சென்றனர்.