காஞ்சிபுரத்தில் கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்தி வரப்பட்ட மதுபானம், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காஞ்சிபுரம் அருகே உள்ள கீழ் அம்பி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மிக வேகமாக வந்த கன்டெய்னர் லாரியை மடக்கி பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
விசாரணையில் அந்த லாரி பிரபல பட்டு சேலை விற்பனை கடைகளுக்கு பொருட்களை ஏற்றிவந்தது தெரியவந்தது. போலீசாரின் சோதனையில் லாரியின் டீசல் டேங்க் அருகே ரகசிய அறை அமைத்து கர்நாடக டெட்ரா மதுபான பாட்டில்கள், புகையிலை பொருட்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவற்றை லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.