பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் வழங்காமல் திமுக அரசு ஏமாற்றி விட்டதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட்டது.
பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் வழங்கப்படாததால் அவற்றை வாங்க மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. குறிப்பிட்ட சிலரே பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிச் சென்றனர். பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் வழங்காமல் திமுக அரசு ஏமாற்றி விட்டதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.