பொங்கல் பண்டிகை காரணமாக, சேலம் மாவட்டத்தில் பூக்களின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வஉசி பூ மார்க்கெட்டுக்கு பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
தற்போது பனி பொழிவு காரணமாக பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
மல்லிகைப்பூ நேற்று கிலோ ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்ற நிலையில், இன்று 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், முல்லை நேற்று கிலோ 800 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று 2 ஆயிரத்து 400 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.