சிவகங்கை அருகே தார் ஏற்றி வந்த டேங்கர் லாரி சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
கேரள மாநிலம் கொச்சினில் இருந்து தார் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று இராமநாதபுரம் நோக்கிச் சென்றுள்ளது.
அந்த லாரி மானாமதுரை அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், லாரியில் பயணித்த ஆஷிக் மற்றும் அவரது சகோதரர் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களை மருத்துவர் பரிசோதனை செய்ததில், ஆஷிக் என்பவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான லாரி ஒட்டுநரை தேடி வருகின்றனர்.