பெரிய இலக்குகளை நிர்ணயிப்பதும், அடைவதும் அரசு இயந்திரங்களின் பணி மட்டுமல்ல, நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இளைஞர் நலத்துறை சார்பில் நடைபெற்ற இளம் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர், வளர்ச்சியடைந்த பாரதம் என்பது மத்திய அரசின் இலக்காக மட்டும் இல்லாமல், இந்தியர்கள் ஒவ்வொருவரின் இலக்காக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பெரிய இலக்குகளை நிர்ணயிப்பதும், அடைவதுமே நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமையாக இருக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.