கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லை என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சென்னையில் பணிபுரியும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தென் மாவட்டம் செல்லும் பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிகளவில் திரண்டனர்.பொங்கல் விடுமுறையொட்டி அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.