நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சாலையில் உலா வரும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், தேவாலா பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று சாலையில் உலா வந்தது. இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் வந்த வழியே திரும்பிச்சென்றனர்.