காசா போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான தற்போதைய நிலைமை குறித்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் சந்தித்து பேசினார்.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே நீண்ட காலமாக மோதல் நடந்து வருகிறது. போர் நிறுத்தத்தை கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாவை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் சந்தித்து பேசினார்.
மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமரிடம் பைடன் வலியுறுத்தி உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.