சீறி வரும் காளைகளுடன் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் அடக்கி வருகின்றனர். நாளை பாலமேட்டிலும், நாளை மறுநாள் அலங்காநல்லூரிலும் அடுத்தடுத்து போட்டிகள் நடக்கின்றன. மேலும், 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.