ஆயுதப்படை வீரர்களின் தியாகத்தால் தான் நாம் இன்று பாதுகாப்பாக உள்ளதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
9-வது ஆயுதப்படை வீரர்கள் தினத்தையொட்டி மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, இயற்கை பேரிடராக இருந்தாலும் சரி, நமது வீரர்கள் எப்போதும் சமூகத்திற்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதாகவும் கூறினார்.