தென்காசி மாவட்டம், குருவன்கோட்டையில் உள்ள மாரியம்மன் கோயிலில் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வழக்கமான பிரசாதங்களுடன் சேர்த்து பக்தர்களுக்கு பூரியும், மசால் கிழங்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. அதனை பக்தர்கள் கோயில் வளாகத்தில் அமர்ந்து ருசித்து மகிழ்ந்தனர்.