சென்னை கோடம்பாக்கம் ஐயப்பன் கோயிலில் நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் தை பிறப்பு மற்றும் மகரவிளக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி வழிபாடு செய்தனர். பின்னர், அங்கு இருந்த பக்தர்களுடன் செல்ஃபி எடுத்து பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.