சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவியிடம் சில்மிஷம் செய்த பேக்கரி ஊழியரை போலிசார் கைது செய்தனர்.
சென்னை ஐஐடியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவர் அருகாமையில் உள்ள பேக்கரி ஒன்றில் டீ அருந்த சென்றிருக்கிறார்.
அப்போது பேக்கரி கடையில் வேலை செய்த உத்தர பிரதேசத்தை மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த மாணவி இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரை பெற்று கொண்ட கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் பேக்கிரி ஊழியர் ஸ்ரீராம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.