டாப் 10 காளைகளுடன் மாட்டுப் பொங்கலை பூர்வீக கிராமத்தில் இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் கொண்டாடினார்.
சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரம் அருகேவுள்ள கத்தப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் தொண்டமான். இவர் இலங்கை நாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
இவரிடம் தற்சமயம் தமிழகத்தின் மிகப்பிரபலமான காங்கேயம், புலி, பாகுபலி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட காளைகள் உள்ளன. இந்நிலையில் இன்று மாட்டு பொங்கல் என்பதால் அவரது பூர்வீக கிராமத்தில் பொதுமக்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாடினர்.