9 தலைமுறைகளாக ஆபரணங்கள் அணியாமல் விரதம் இருந்து வெள்ளை சேலை உடுத்தி சமத்துவ பொங்கல் வைத்து பெண்கள் வழிப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே சலுகைபுரம் கிராமத்தில் பச்சைநாச்சியம்மன், பாலடி கருப்பர் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு 40 குடும்பங்களை சேர்ந்த பெண்கள் 40 நாட்களாக தங்க நகைகள் ஏதும் அனியாமல் விரதமிருந்து வெள்ளை சேலை உடுத்தி, மாட்டு தொழுவத்திற்கு முன்னாள் மண்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இதனை 9 தலைமுறைகளாக கிராம மக்கள் பாரம்பரியமாக கடைப்பிடித்து வருகின்றனர்.