இலங்கை வல்வெட்டித்துறை கடற்கரையில் கொட்டும் மழையில் பட்டம் விடும் போட்டி நடைபெற்றது.
பொங்கலையொட்டி யாழ்ப்பாணத்தை அடுத்த வல்வெட்டித்துறையில் பட்டம் விடும் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக மற்றும் நடிகர் விஜய் ஆகியோரது உருவப்படம் பொறித்த பட்டம், ராக்கெட் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பட்டம் உள்பட ஏராளமான பட்டங்கள் பறக்க விடப்பட்டன.
வல்வெட்டித்துறை கடற்கரையில் நடைபெற்ற இவ்விழாவில் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் முதன்மை விருந்தினராக பங்கேற்றார். கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஏராளமான பார்வையாளர்கள் பங்கேற்று போட்டியைக் கண்டுகளித்தனர்.