அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு சீன அதிபர் ஷி ஜின் பிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அமெரிக்காவும் சீனாவும் எதிரும் புதிருமாக செயல்படும் சூழலில், ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் சீன அதிபருக்கு அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை ஏற்று சீன துணை அதிபரோ அல்லது வெளியுறவு அமைச்சரோ ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என சீன அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதவிர இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் ஆகியோருக்கும் வெள்ளை மாளிகை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.