மாட்டின் கோமியம் மிகப்பெரிய மருந்து எனவும், அது பல்வேறு நோய்களை குணப்படுத்தக் கூடியது எனவும்,சென்னை ஐஐடி-யின் இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில், மாட்டுப் பொங்கலையொட்டி, கோ பூஜை நடைபெற்றது. அப்போது, 100க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு சிறப்பு ஆராதனை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டு மாடுகள் அழிந்து வரும் இனமாக மாறி வருவதாகவும், அவற்றின் சானம், பால், கோமியம் ஆகியவை இயற்கை விவசாயத்திற்கு மிக முக்கியமானவை எனவும் கூறினார்.
மேலும், கோ சாலை Automation எனும் திட்டம் மூலம் இன்னும் ஒரு வருடத்தில் ஆராய்ச்சி செய்து, வரட்டி, விபூதி உள்ளிட்டவை தயாரிப்பதற்கான முறையை செயல்படுத்துவோம் என காமகோடி தெரிவித்தார்.