கும்பமேளா விழாவின் 3ஆம் நாள் நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர்.
உத்தரப் பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளாவில், உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் அமைந்துள்ள பிரயாக்ராஜ் நகரில் ஏராளமான மக்கள் புனித நீராடி வருகின்றனர்.
கும்பமேளா விழாவின் முதல் நாளில் மட்டும் சுமார் ஒருகோடி பேர் நீராடியதாக தெரிவிக்கப்பட்டது. 3ம் நாளில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடினர்.