ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விஞ்ஞானிகளுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது :
“ஸ்பேஸ் டாக்கிங் பரிசோதனையான ஸ்பேடெக்ஸின் கீழ் ஏவப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களின் வெற்றிகரமான டாக்கிங் மூலம் இந்தியாவின் விண்வெளித் திட்டம் வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது!
விண்வெளி டாக்கிங் திறனை வெளிப்படுத்திய நான்காவது நாடு இந்தியா. இந்த சாதனை சந்திரயான்-4, இந்தியாவின் திட்டமிடப்பட்ட விண்வெளி நிலையம் மற்றும் ககன்யான் போன்ற விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் எதிர்கால முயற்சிகளுக்கு வழி வகுக்கிறது.
இந்தியாவின் விண்வெளித் திறன்களை மேம்படுத்துவதற்காக இஸ்ரோ மற்றும் நாட்டின் முழு விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள் என திரௌபதி முர்மு கூறியுள்ளார்.