தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மதுபோதையில் காரை தாறுமாறாக இயக்கி இருசக்கர வாகன ஒட்டி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை, வேளச்சேரி பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா மதுபோதையில் காரை தாறுமாறாக இயக்கி சென்றார். அப்போது சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது மோதி விட்டு மற்றொரு காரை வரவழைத்து விக்கிரமராஜா அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது.
இதில் விபத்தில் சிக்கிய நபர் மிரட்டப்பட்டதாகவும், அவரை புகார் கொடுக்கவிடாமல் தடுத்து ஒரு கும்பல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து எந்த புகாரும் அளிக்கப்படாத நிலையில், இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.