புத்தொழில் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது: பிரதமர் மோடி
Aug 18, 2025, 09:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புத்தொழில் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது: பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Jan 16, 2025, 04:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த ஒன்பது ஆண்டுகளில், ஸ்டார்ட் அப் இந்தியா இயக்கத்தின்  திட்டங்கள் எண்ணற்ற இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் புதுமையான யோசனைகளை வெற்றிகரமான புத்தொழில்களாக மாற்றியுள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஸ்டார்ட் அப் இந்தியா இயக்கத்தின் ஒன்பதாண்டு நிறைவையொட்டி பிரதமர்  நரேந்திர மோடி இன்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த ஒன்பது ஆண்டுகளில், மாற்றத்துக்கான இந்த சிறந்த திட்டம் எண்ணற்ற இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் புதுமையான யோசனைகளை வெற்றிகரமான புத்தொழில்களாக மாற்றியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில்,

“புதுமை, தொழில்முனைவு, வளர்ச்சி ஆகியவற்றை சிறப்பாக மறுவரையறை செய்த ஒரு மைல்கல் முயற்சியான ஸ்டார்ட் அப்  இந்தியா இயக்கத்தின் ஒன்பதாண்டு நிறைவை (#9YearsOfStartupIndia) இன்று நாம் கொண்டாடுகிறோம்.

இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் சக்திவாய்ந்த வழியாக இது உருவெடுத்துள்ள நிலையில், இந்தத் திட்டம் எனக்கு  மிகவும் பிடித்த முக்கியமான திட்டமாகும். கடந்த ஒன்பது ஆண்டுகளில், இந்த சிறந்த திட்டம் எண்ணற்ற இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. அவர்களின் புதுமையான யோசனைகளை வெற்றிகரமான புத்தொழில்களாக மாற்றியுள்ளது.

அரசைப் பொறுத்தவரை, புத்தொழில் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கான அனைத்து முயற்சிகளையம் எடுத்துள்ளது. நமது கொள்கைகள் வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல், வளங்களை அதிக அளவில் அணுகுதல், ஒவ்வொரு கட்டத்திலும் தொழில் துறையினருக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகின்றன.

நமது இளைஞர்கள் துணிச்சலுடன் செயல்பட்டு முடிவெடுப்பவர்களாக  மாறுவதற்காக, புதிய கண்டுபிடிப்புகளையும் அதற்கான தொழில் பாதுகாப்பு மையங்களையும் நாங்கள் தீவிரமாக ஊக்குவித்து வருகிறோம். புத்தொழில் நிறுவனத்தினருடன் நான் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து உரையாடி வருகிறேன்.

ஸ்டார்ட் அப் இந்தியா இயக்கத்தின் இந்த வெற்றியானது இன்றைய இந்தியா ஆற்றல்மிக்க, நம்பிக்கை மிகுந்த, எதிர்காலத்திற்கு தயாராக உள்ள இந்தியா என்பதை பிரதிபலிக்கிறது.

இந்த பயணத்தை நாம் மேற்கொள்ளும் போது, ஒவ்வொரு கனவையும் மேம்படுத்தும் வகையில் தற்சார்பு இந்தியாவுக்கு பங்களிக்கும் ஒரு தொழில்முனைவோர் சூழல் அமைப்பை தொடர்ந்து வளர்த்தேடுப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலுப்படுத்துகிறோம்.

புத்தொழில் உலகில் உள்ள ஒவ்வொரு இளைஞரையும் நான் பாராட்டுகிறேன். மேலும் அதிகமான இளைஞர்கள் இதில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனால் நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள் என்பது என் நம்பிக்கை!”  என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags: StartupIndiaPM Modi9YearsOfStartupIndia
ShareTweetSendShare
Previous Post

மாவட்ட ஆட்சியரை அவமதித்த உதயநிதி! : அண்ணாமலை கண்டனம்

Next Post

நடிகர் சயிப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை – அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

Related News

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவர் கைது!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

என்டிஏ குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

Load More

அண்மைச் செய்திகள்

திருத்தணி முருகன் கோயில் தெப்ப திருவிழா – திரளான பக்தரகள் பங்கேற்பு!

பொள்ளாச்சி நந்த கோபால்சாமி மலை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிப்பு – தம்பதி குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி 4-ம் நாள் திருவிழா கோலாகலம்!

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் – திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் பேட்டி!

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்து!

 தேங்காய் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் – 3 மணி நேரம் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies