ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்பை நோக்கிய நமது பயணத்தில் மற்றொரு மைல்கல் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் விடுதுள்ள பதிவில் கூறியுள்ளதாவது : “ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ₹3,985 கோடி முதலீட்டில் மூன்றாவது ஏவுதளத்தை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடிடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், விண்வெளித் துறை துடிப்பான மற்றும் செழிப்பான களமாக மாற்றப்பட்டுள்ளது, இது இந்தியாவை புதுமை மற்றும் சிறப்பின் புதிய எல்லைகளை நோக்கி நகர்த்துகிறது.
சுயசார்பு மற்றும் மேம்பட்ட விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்பை நோக்கிய நமது பயணத்தில் இது மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது” என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.