மத்திய அரசின் அனைத்து ஊழியர்களுக்கும் 8வது மத்திய ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளரிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மூன்றாவது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. 3,985 கோடி ரூபாய் மதிப்பில் மூன்றாவது ஏவுதளம் அமைய உள்ளது. பணிகள் 4 ஆண்டுகளில் நிறைவு பெறும்.
இதன் மூலம், இஸ்ரோ அதிகளவில் விண்கலங்களை விண்ணில் செலுத்துவதற்கும், விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லவம், விண்வெளி ஆய்வு திட்டங்களுக்கும் உதவும் எனத் தெரிவித்தார்.
















