ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப முயன்ற எம்.ஜி.ஆர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனத்தலைவருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில், எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப அவர் மேற்கொண்ட முயற்சிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் தொடர்பான வீடியோ பதிவு ஒன்றையும் பிரதமர் வெளியிட்டுள்ளார்.