கடற்படைக்கு ஏவுகணைகளை வினியோகிக்க பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், இந்திய கடற்படைக்கு சுமார் 2 ஆயிரத்து 960 கோடி ரூபாய் செலவில் ஏவுகணைகளை வினியோகிக்க, பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பாதுகாப்புத்துறை செயலர் ராஜேஷ்குமார் சிங் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்துவது, நவீன ராணுவ உபகரனங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது உள்ளிட்ட முயற்சிகளுக்கு இந்த ஒப்பந்தம் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
மேலும், பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.