இந்தியாவில் மூன்று இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு நீக்கியுள்ளது.
2005ம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், ஏற்றுமதி அங்கீகாரம் வழங்குவதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், பாபா மற்றும் இந்திரா காந்தி அணுசக்தி ஆய்வு மையங்கள் உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கடந்த வாரம் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட நிலையில், அவரது பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.