மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சிலைக்கு, எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், 108 கிலோ அளவிலான கேக் வெட்டிய அவர், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
இதேபோல சென்னை போயஸ் கார்டனில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு வி.கே.சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.