ஜார்கண்ட் சென்றுள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன் ஜகன்னாத்பூர் தொழில் பயிற்சி நிறுவனத்தை பார்வையிட்டார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : ” ஜகன்னாத்பூருக்கு தொழில் பயிற்சி நிறுவனத்தைப் பார்வையிடச் சென்றேன். ஜார்க்கண்டின் வளமான கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் பாரம்பரிய பழங்குடி நடனத்துடன் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
டாடா ஸ்டீல் அறக்கட்டளையால் நடத்தப்படும் ஐடிஐ, பழங்குடி மக்களுக்கு தொழில் பயிற்சி அளிப்பதன் மூலம் அதிகாரம் அளிக்கிறது, இதனால், இப்பகுதியில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது என எல்.முருகன் கூறியுள்ளார்.