இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
இந்திய வீரர்கள் அனைவரும் இனி கண்டிப்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும், முறையான அனுமதியின்றி தங்களது மனைவி, குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீரர்கள் அனைவரும் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பயண விதிமுறைகளுக்கு உட்பட்டே பயணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.