சைபர் மோசடியில் சிக்கி கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி 90 லட்ச ரூபாயை இழந்திருக்கிறார்.
வாட்ஸ்அப் குரூப் வழியாக போலி பங்கு வர்த்தக செயலியில் சுமார் 90 லட்ச ரூபாயை கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சசிதரன் நம்பியார் முதலீடு செய்துள்ளார்.
வாட்ஸ்அப் குரூப்பில் சேர்ந்தவுடன், ட்ரேடிங் மூலம் 850 சதவீத வருமானம் தருவதாக அவர் ஏமாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பாக கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.