சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், இளைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்று காளைகளை அடக்கினர்.
பொங்கல் திருநாளை ஒட்டி, கூலமேடு கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். முன்னதாக போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
போட்டியின் முதல் சுற்றில் 100 காளைகளும், 50 மாடுபிடி வீரர்களும் களம் இறங்கினர். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போராடி அடக்கினர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.