கேல் ரத்னா விருது பெற்ற உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
டெல்லியில் நடைபெற்ற, விளையாட்டு வீரர்களுக்கான தேசத்தின் உயரிய விருதுகள் வழங்கும் விழாவில், சமீபத்தில் உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ‘மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா’ விருது வழங்கி கௌரவம் செய்தார்.
விளையாட்டு வீரர்களுக்கான நாட்டின் உயரிய விருது பெற்றுள்ள குகேஷுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.