சென்னையில் பணியில் இருக்கும் போது உயிரிழந்த போக்குவரத்து தலைமை காவலரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவர் மணலி போக்கு வரத்து காவல்துறையில் தலைமை காவலராக பணியாற்றினார்.
அவர் பணியில் இருந்த போது திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து காவலரின் உடல் 21 குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.