சென்னையில், தனியார் பல்கலைக்கழக பொறியாளரின் செயின் பறித்த இருவரை சிசிடிவி காட்சியை கொண்டு மாம்பலம் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொறியாளர் மோகன்ராஜ், கடந்த 12ம் தேதி சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு செல்ல, கிண்டி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, மோகன்ராஜை பின் தொடர்ந்து வந்த இருவர், அவர் கழுத்தில் அணிந்திருந்த
இரண்டு சவரன் தங்க செயினை பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை கொண்டு, கொருக்குப்பேட்டையை சேர்ந்த சரண்ராஜ், வியாசர்பாடியை சேர்ந்த விக்ரம் ஆகியோரை மாம்பலம் ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.