சூரி நடிக்கும் மாமன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
விலங்கு இணைய தொடர் மூலம் பிரபலமான பிரசாந்த் பாண்டியராஜ், தற்போது மாமன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதில், சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 6 வயது சிறுவனுக்கும் தாய் மாமனுக்கும் இடையேயான உறவை அடிப்படையாக வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக உருவாகி வருகிறது.
திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது.