திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மாயமான சிறுமி மாரி அனுசியா சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்துடன் வேனில் முக்கூடல் வந்துள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றவர்களில், ஆறு பேரை தண்ணீர் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. 4 பேரை உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், சிறுமிகள் மாரி அனுசியா மற்றும் வைஷ்ணவி மாயமாகினர்.
வைஷ்ணவியின் உடல் மீட்கப்பட்ட நிலையில், மாரி அனுசியாவை தீயணைப்புத்துறையினர் 2வது நாளாக தேடி வந்தனர். இந்நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிறுமி மாரி அனுசியா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இரண்டு சிறுமிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.