தெலங்கானாவில் தானமாக வழங்கப்பட்ட இதயத்தை மருத்துவக்குழுவினர் ஜெட் வேகத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
ஐதராபாத்தில் இருந்து லக்டி-கா-புல் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்ட இதயத்தை எடுத்து செல்ல வேண்டியிருந்தது.
சுமார் 13 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டிய சூழல் இருந்ததால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் உதவியுடன் வெறும் 13 நிமிடங்களில் 13 கிலோமீட்டர் பயணம் செய்து இதயத்தை விரைவாக மருத்துவக் குழுவினர் வழங்கினர்.