ஆந்திராவில் பாலகிருஷ்ணாவின் டாக்கு மகராஜ் திரைப்படம் வெளியீட்டின் போது திரையரங்கம் முன் ஆடு பலி கொடுத்த ரசிகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாலகிருஷ்ணா நடித்த டாக்கு மகராஜ் திரைப்படம், திருப்பதியில் உள்ள குரூப் தியேட்டரில் திரையிடப்பட்டது. இதனால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் தியேட்டர் முன் ஆடு ஒன்றை பலி கொடுத்து பாலகிருஷ்ணாவின் சினிமா போஸ்டர் மீது ரத்தத்தை தெளித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் மீது திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.