ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் நிலையில், கடந்த 10ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
கடைசி நாளில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர்கள் சீதாலட்சுமி தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் பணிஸ் தலைமையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.
ஈரோட்டில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகத்தில், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற வரும் 20ஆம் தேதி கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.